Thursday, July 29, 2021

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️









தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன் வீட்டின் ஒரு புறத்தின் புத்தக அலுமாரியின் மேற் புறத்தில் கிடந்த " பாக்கர்" பேனா ஒன்று என்னை பார்த்து பேசியது. அது தன் கதையை மிக கவலையுடன் கூற தொடங்கியது. "பாக்கர்" பேனா கூறிய கதையை நீங்களும் கேட்க விரும்புகிறீர்களா? இதோ! கேளுங்கள். 
   
    தம்பி நான் ஒரு "பாக்கர்" பேனா. இப்பொழுது கூர் உடைந்து முடங்கி கிடக்கிறேன். உனது அண்ணா அருண் தான் என்னை போட்டுள்ளான். அவனுக்கு உங்களுடைய மாமா என்னை பிறந்தநாள் பரிசாக மூன்று வருடங்களுக்கு முன்னர் கொடுத்திருந்தார். அப்பொழுது நான் எவ்வளவு அழகாக இருந்தேன் தெரியுமா? தங்க நிறத்தில் பளபளவென்று ஒளி வீசி கொண்டிருந்தேன். என்னை தன் சாட்டை பைக்குள் வைத்திருப்பதே பெரும் பேறென கருதினான். என் எழுத்துக்கள் முத்து போல காட்சி அளிக்கும். அந்தளவுக்கு 3ன் கூர் அழகாக எழுதுதற்கு பயன்பட்டது. என் உதவியினால் அருமையான கட்டுரைகள், கவிதைகள், போன்றவற்றை எழுதினான். அவனது வகுப்பு மாணவர்கள் எல்லாம் என்னை ஆசையோடு பார்ப்பார்கள்.
       
யாழ் இந்து கல்லூரியில் க. போ. த சாதாரண தர பரீட்சை நடைபெற்றது. அந்த பரீட்சையில் என்னை உபயோகித்து பல்வேறு பாடங்களுக்கும் விடை எழுதினான். ஒவ்வொரு பாடங்களுக்கும் அவனுக்கு "ஏ" சித்தி வந்தது. அதனால் அவன் என் மீது அளவற்ற அன்பு கொண்டான். அதிஷ்ட பேனா என்று என்னை தனது கன் போல காத்து வந்தான். யார் கேட்டாலும் என்னை கொடுக்க மாட்டான். பாடசாலை செல்லும் போதெல்லாம் என்னை தன் புத்தகக் பையினுள் பத்திரமாக வைத்து கொண்டு செல்வான். இப்படியே ஒர் ஆண்டு கழிந்தது. ஒரு நாள் அருண் பேருந்து மிதிபலகையில் ஏறும் போது பக்கத்தில் நின்றோரின் நெருக்கடியில் அவனது சட்டை பையினுள் இருந்த நான் தவறி கீழே விழுந்து விட்டேன். பக்கத்தில் நின்ற ஒரு பயணியின் சாப்பாத்து காலின் கீழ் நான் அகப்பட்டு விட்டேன். என் முடியும் பேனா கூரும் நசிந்து விட்டது. அருண் மிக சிரமத்தோடு குனிந்து என்னை எடுத்து பார்த்தான். என் கூர் ஒடிந்திருப்பதை பார்த்து மிக்க வேதனை பட்டான். வீடு செல்லும் வழியெல்லாம் விம்மி விம்மி அழுதான்.
       எனக்கு புதிய கூர் ஒன்றை பொருத்த பல கடைகளும் ஏறி இறங்கினான். ஆனால் பொருத்தமான கூர் கிடைக்கவில்லை. என்னை எறியவும் மனமில்லை. புத்த்க அழுமாரியின் மேலே என்னை வைத்து விட்டான். கடந்த ஒர் ஆண்டு காலமாக யான் இங்கே கிடக்கிறேன். யான் முன்னர் இருந்த நிலையையும் இப்போது இருக்கு நிலையையும் எண்ணி பார்க்கிறேன். வேதனை என்னை வாட்டுகிறது. எனக்கு ஏதும் விமோசனம் கிடைக்குமா? அருண் முன்னர் போல என்னை தன் சட்டை பைக்குள் கொண்டு செல்லும் நாள் வருமா? என்று ஏங்கி தவிக்கிறேன். என் கவலையை அருணிடம் சொல்லு தம்பி என்று கூறியது அந்த பாக்கர் பேனா...............................

Tuesday, July 27, 2021

கட்டுரை := நான் மருத்துவரானால்

👩‍⚕️👨‍⚕️நான் மருத்துவரானால் 👩‍⚕️👨‍⚕️





 மனிதன் மகிழ்ச்சியாக வாழப் பிறந்தவன்.  அவன் துன்பங்களின் சுமையாலியாக மாறக்கூடாது. அவனுக்கு வேண்டியது குறைவற்ற செல்வம் ஆகிய நோயற்ற வாழ்வே ஆகும். அவன் மருத்துவமனைகளில் நெருங்கிய வாடிக்கையாளராக மாறிவிடக்கூடாது. நான் மருத்துவரானால் நோயற்று வாழ்வு வழிமுறைகளை மக்களுக்கு எடுத்துக் கூறுவேன். அதன் மூலம் சமுதாயத்தில் பேரன்பும் பெருமதிப்பும் உரியவனாவேன்.    நோய்களை பெருக்கி சிகிச்சை அளிக்கும் நிலையினை மாற்ற முயல்வேன். நோய்கள் பிரவா வண்ணம் வாழும் நெறிகளை மக்களுக்கு எடுத்துரைப்பேன். நாட்டில் பிரசாரத்தால் நோய்களை குறைத்திட வேண்டும் என்பதே என் குறிக்கோள். பிரசாரத்தால் மட்டும் இது சாத்தியப்படாது. சுகாதார விதிகளையும் மீறி சில நோய்கள் காரணம் அறியமுடியாமல் ஏற்பட்டு விடுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகப் புற்றுநோயை குறிப்பிடலாம். இத்தகைய நோய்களுக்கு சிகிச்சை அளித்தல் வேண்டும். இதுவும் என் கடமை ஆகும். என் மருத்துவப் படிப்பு  பயன்பட வேண்டும். எனவே என் பணிகளை ஒரு வகையில் ஆற்றிட முயற்படுவேன். ஒன்று அறிவுப் பணி. மற்றையது ஆக்கப் பணி. நான் அறிவாலும் தொண்டு செய்வேன். நான் நோயாளிகளுடன் அன்புடன் அழைத்து மருந்து அளித்து அவர்களது நோய்களைக் குணமாக்க முற்படுவேன். இன்சொல் நல்ல மருத்துவம். நயமிகு கணிப்பு - இவையே  மருத்துவப் பணியின் ஆணிவேர் ஆகும்.



" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பதை உணர்த்திடும் மக்கள் மருத்துவனாக நான் செயற்படுவேன்.  

Monday, July 26, 2021

கட்டுரை := சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம்

சிறுவர்உரிமைகளைப்பாதுகாப்போம்🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑




 சிறுவர்கள் தான் சிறந்த விஞ்ஞானிகள் என்று முன்னை நாள் இந்திய ஐனாதிபதி அப்துல்கலாம் கூறினார் அந்த சிறுவர்களுக்கு வழிகாட்டி நல்வழிப்படுத்தல் நம் தலையாய கடமையாகும் அவர்களின் தேவைகளை உணர்ந்து வாழ்வளிக்க வேண்டும்

"சின்னஞ் சிறு குருவி போல- நீ
திரிந்து பறந்து வா பாப்பா
..................................................................
என்ற பாரதியாரின் பாடல் வரிகள் சிறுவர்களின் சுதந்திரத்தை எடுத்தியம்புகின்றன.சுதந்திரம் சிறுவர்களிடத்தே காணப்பட வேண்டும் உறுதியுள்ள உள்ளம் சிறுவர்களிடையே வளர்ச்சியடைய வேண்டும். அப்பொழுது தான் எதிர்கால தலைவர்களான சிறுவர்களின் உள்ளத்திலே குறிப்பிட்ட உரிமைகளெல்லாம் பேணப்படும்.

உலகமகா யுத்தத்தின் முன் சிறுவர்கள் தொழிற்சாலை களில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் . பெரியவர்களை போலவே நடத்தப்பட்டார்கள் . குறைந்த ஊதியத்தை கொடுத்து நிறைந்த வருவாயை பெற்றார்கள். சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் வேலை கொடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது.


சிறுவர்கள் உரிமைகள் பற்றி' ஐக்கிய நாடுகளின் சமவாயம் ' 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ள பட்டாலும் இவ்வாண்டுக்கு முன்னரேயே சிறுவர் பற்றிய அமைப்புக்கள் தோன்றி இருப்பதைக் காணலாம். இந்த வகையில் 1946 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சிறுவர்நிதியம் (யுனிசெப்) ஆகும். இது சிறுவர் சாசனத்திற்கு உட்பட்டதாக சிறுவர்கள் பாதுகாப்பு உயிர் வாழ்தல் சிறுவர் அபிவிருத்தி போன்றவற்றுக்காக இயங்கி வருவதையும் நாம் கண்டு கொள்ளலாம்.

இன்றைய உலக சமூகத்தில் சிறுவர்களும் சிறுவர் உரிமைகளும் முக்கிய இடம் பெறுவதைக் காணலாம்.'இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்'என்ற முதுமொழிக்கு இணங்க சிறுவர்கள் பாதுகாக்க பட்டு அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டிய கட்டாய நிலைக்கு இன்று உலகளாவிய ரீதியில் நாடுகள் தள்ளப்பட்டிருப்பதைக்காணலாம்.

இவ் ஆண்டில் யுத்த நடவடிக்கைகளாலும் மற்றும் வேலைக்கு அமர்த்தல் , பாலியல் வல்லுறவு, போதைவஸ்து அநாதைகள் ஆக்கப்படும் போன்ற காரணங்களினால் சிறுவர் பாதிக்கப்பட்டு அவர்களது உரிமைகளும் மீறப்பட்டு வருவதையும் கண்டு கொள்ளலாம். வருங்கால சமுதாயம் சிறப்பாக அமைவதற்குச் சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.உலகம் வேகமாக முன்னேற்றம் அடைந்தாலும் சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

இன்று உலகளாவிய ரீதியில் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அண்மையில் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளனர்.

Saturday, July 24, 2021

கட்டுரை := மகாத்மா காந்தி

🇮🇳 மகாத்மா காந்தி🇮🇳





 ஐரோப்பியர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்தியாவை அடக்கி ஆண்டனர். ஈற்றில் பிரித்தானியரின் ஆட்சி நடந்தது. அடக்குமுறை அதிகரித்துக்கொண்டே இருந்தது.ஆங்கிலக்கல்வி ஆட்சிமொழியாக இருந்தது. இந்தியா மக்கள் நடிப்புச்சுதேசிகளாயினர். 1869 அக்டோபர் இரண்டாம் நாள் குஜராத் மாநிலத்தில் காபா காந்தி சந்தோஷமாக இருந்தார. அவரது மனைவி புத்திலிபாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு மோகனதாஸ் என்று பெயரிட்டனர்.       மோகனதாஸ் காந்தி என்று அழைக்கப்பட்டார்.  மோகனதாஸ் சமஸ்கிருதம், கிந்தி,ஆங்கிலம், பேர்சியன்,  அரபிக் முதலிய மொழிகளையும் கற்றார். அக்கால வழக்கப்படி  காந்திக்கு 13 வயதில் திருமணம் நடத்தி வைத்தனர். கஸ்தூரிபாய் அவரது   மனைவியானார். மோகனதாஸ் தாயார் சமயப் பற்றுடையவர். மோகனதாஸ் சிறுவயதுதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பலமுறை பார்த்திருக்கிறார். தனது வாழ்க்கையையும்  அரிச்சந்திரன் போல  அமைத்துக்கொள்ள வேண்டும் என தீர்மானித்தார். என்றும் சத்தியத்துக்காக வாழவேண்டும் என அவர் திடசங்கற்பம்  பூண்டார். 1887 இல்  மோகன்தாஸ் காந்தி  இங்கிலாந்திற்கு சென்றார். அப்போது  அவரது அன்னை மூன்று முக்கிய சத்தியங்களை செய்து தருமாறு கேட்டுக்கொண்டார்.   ஒன்று மதுவை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.  இரண்டு  தொடர்வு வைப்பதில்லை.  மூன்று பொய் சொல்வதில்லைை. அவ்வாறே சத்தியம் செய்து கொடுத்தார். அதனைத் தன் வாழ்நாளில் கடைசி வரை அவர் கடைப்பிடித்தார்.  நான்காண்டுகள் சட்டத்தை கற்று பரீஸ்டர் பட்டத்தோடு இந்தியா திரும்பினார். ஒரு வழக்குக்காக தென்னாபிரிக்கா சென்றார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அடிமைகளாக வாழ்வதை கண்டார். இதன் பயனாக மோகனதாஸ் பல கஷ்டங்களை அனுபவித்தார். நிறவெறி அங்கு தலைவிரித்தாடியது. சிறுபான்மை  வெள்ளையர்கள் பெரும்பான்மை,கருப்பின மக்கள் அடக்கி ஒடுக்கினர். ஒரு நாள் புகைவண்டியில் முதல் வகுப்புப் பெட்டியில் காந்தி பயணம் செய்து கொண்டிருந்தார். வேணாம் செலுத்தி முதலாம் வகுப்பில் சென்றாலும்  வெள்ளையர்கள் வந்தால் எழுந்து இடம் கொடுக்க வேண்டும். ஒரு வெள்ளைக்காரன் வந்தான். வேறு இடுக்கைகள் காலியாக இருந்தன. அந்த வெள்ளைக்காரன் அவரை எலும்புமாறு கட்டளையிட்டார். அவர் மறுத்துவிட்டார். அவரை முறைத்துப் பார்த்தான். அடுத்து புகையிரத நிலையத்தில் காந்தியே இழுத்து அடித்து  சப்பாத்தால் உதைத்தார். உதைந்ததால்  காந்தியின் பல் உடைந்து ரத்தம் கொட்டியது. அவனது சப்பாத்துக் காலைத் தடவி உங்களுக்கு வலிக்க வில்லையா?என்று தடவி விட்டார். அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார். வீட்டில் 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. எனினும் 1948 கோட்ஸே என்பவனால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். அஜிம்சா மூர்த்தி மோகன்தாஸ் காந்தி இவ்வுலகை விட்டு நீர்த்தார். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட மகானுக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு ஒரு துப்பாக்கி குண்டு. இது வேதனைக்குரியது.

Friday, July 23, 2021

கட்டுரை= சுப்ரமணிய பாரதியார்

 🌏சுப்ரமணிய பாரதியார் 🌏 





பாட்டுக்கொரு புலவன் பாரதியடா'' அவன் பாட்டு கேட்டு கிறுகிறுத்துப் போனேனடா''. என்று பாடினார் ஒரு கவிஞர். பாரதியார் இந்தியாவில் தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில்   1881.    டிசம்பர்  21ஆம் திகதி பிறந்தார். சின்னச்சாமி ஐயரும் இலக்குமி அம்மாளும் பாரதியாரின் தந்தையும் தாயும் ஆவார்கள். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம் என்பதாகும்.  அவரை சுப்பையா என்று அழைத்தனர்.  சுப்பிரமணியன் வயது இருக்கும் போதே தாயார் இறந்துவிட்டார். பாட்டிி பகீரதி அம்மாளுடன் வாழ்ந்தார். பாடசாலையில் படிக்கும் போது கவிபுனையும் ஆற்றலில் சிறந்து விளங்கினார்.  1897 ஆம் ஆண்டு செல்லமாவை மனம் செய்து வைத்தார்கள். 1898 தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வறுமை வாட்டியது. தனது நிலையை விளங்கி  தனக்கு உதவிபுரியுமாறு எட்டயபுர அரசருக்கு.  எழுதினார் அரண்மனையில் அவருக்கு வேலை கிடைத்தது. கவிஞர்கள் ஒரு வேளை நிலைத்து நிற்கவில்லை. வேலையை விட்டு காசிக்கு சென்றார். எட்டயபுரம் மன்னரால் அழைத்து வரப்பட்டு அவரது அரண்மனையில் இடம் கொடுத்தார்.  பல காலம் பாட்டெழுதாமல் இருந்தார். மதுரையில் இருந்து விவேகபானு என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது.  அதில் 1904 பாரதியின் ஆக்கம் வெளியானது. மதுரை சேனாதிபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் கடமையாற்றினார். வல்லூறு கட்டிடங்களில் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றினார்.  பாரதி தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிருதம்   ஆகியவற்றில் பெற்றிருந்தார்.


" தேடிச்சோறு நிதந்தின்று-பல

 சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
 வாடித் துன்பமிக  உழன்று - பிறர்
 வாடப் பல செயல்கள் செய்து -நரை
 கூடிக் கிழப்பருவம் எய்தி -பெருங்
 கூற்றுக் கிரையென மாயும் - பல
 வேடிக்கை மனிதரைப் போலே- நான்
 வீழ்வேன் என்று நினைத்தாயோ?


 பாரதி ஒரு புதுமைக் கவி. ஒரு புரட்சிவாதி. சுதந்திரப் போராளி. பத்திரிகையாசிரியர், தமிழ் கவிதையின் முன்னாடி. பண்டிதர்களின் போகப்போக உரிமையாய் இருந்த கவிதையினைப் பாமர மக்களும் விளங்கும் வகையில் எளிமைப்படுத்திய பாவலன் பாரதிதான். 1921 செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி இவ்வுலகை நீத்தார்.

Thursday, July 22, 2021

கட்டுரை:= டாக்டர் அப்துல் கலாம்.

👨‍⚕️👨‍⚕️டாக்டர் அப்துல் கலாம் 👨‍⚕️👨‍⚕️


 


 அப்துல் கலாம் இந்தியா நாட்டு ராமேஸ்வரத்தில் பிறந்தார். அவர் ஆவுல் பக்கீர் ஜெயினாலாப்தீன், ஆஸியா உம்மா தம்பத்தியரின்  மகனாவார். அப்துல் கலாம் 1931 அக்டோபர் 15ஆம் திகதி பிறந்தார். அவர்களது குடும்பம் ஏழ்மையானது. வருமை அவர்களது  குடும்பத்தை வாட்டியது. தொடக்கக் கல்வியை சொந்த ஊரில் கற்றார்.  பாடசாலை முடிந்ததும் பத்திரிகை விநியோகம் செய்தார்.   உயர்கல்வியை திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் கற்றார். அவர் இலங்கவியல் துறையில் பட்டத்தைப் பெற்றார்.  சென்னையில் உள்ள எம். ஐ. ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் கற்றார். அத்துறையில்முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றார்.  அப்துல்கலாம் இந்திய ராணுவத்திற்காக சிறிய உலங்குவானூர்தியை  வடிவமைத்தார்.  1980ஆம் ஆண்டு SLV-111 ரோக்கேற்றைப் பயன்படுத்தி ரோகினி என்ற துணைக்கோளை வெற்றிகரமாக எவச் செய்தார்.  இதற்காக இந்திய ஏவுகணை திட்டத்தில் பணிபுரிந்துள்ளார். 2007ஆம் ஆண்டு வரை இந்தியா குடியரசின் தலைவராக பதவிவகித்தார். இரண்டாவது தடவை போட்டி போடுவதில் இருந்து தன்னை விலகிக்கொண்டார். இது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. இந்திய அரசு     ''பாரத ரத்னா '' விருதினை வழங்கிக் கௌரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார்.         குழந்தைகளை மதிக்கும் பெருந்தலைவர் கலாம் அவர்களே.  சிறந்த விஞ்ஞானிகள் குழந்தைகளே என்று கலாநிதி கலாம் கூறினார்.  அவரது மகத்தான சேவையை புரிந்து கொள்ளும் பக்குவம் பல தலைவர்களுக்கு இன்னும் வரவில்லை. டாக்டர் அப்துல் கலாம் சிறந்த எழுத்தாளரும் ஆவார்.  அவரது ''அக்னி சிறகுகள் '' இவரது சிறந்த நூலாகும்.  இளைஞர்களே கனவு காணுங்கள் உங்கள் கனவு தாய்நாட்டில் முயற்சிக்கானதாக இருக்க வேண்டும்.  தான் பிறந்த நாட்டில் உயர்ச்சிக்காகப் பாடுபட்ட உத்தம மனிதர் அப்துல் கலாம் ஆவார். அப்துல் கலாம் அவர்கள் 21/07/2015  இயற்கை எய்தினார். அவரது பூத உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் 30/7/2015ல்  சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது..

தரம் 6,7,8,9 மாணவர்களுக்கான காட்டுரைகள் (நான் ஒரு பறவை யானால் )

🦜🦜 நான் பறவையானால்......🦜🦜




 நேற்று      பூந்தோட்டத்தில்    நீர்    ஊற்றிக் கொண்டிருந்தேன்.   அப்போது   ஒரு   அழகிய  கிளி   எங்கள்   முற்றத்து   மாமரத்தில்   வந்திருந்தது.   அதன்   அழகு   என்னை   பெரிதும் கவர்ந்தது.   அது   கீ.... கீ....  என்று  கீச்சிடுவதே   தனி   ஆனந்தம்.   இதைப்    போன்று   யானும்   ஒரு   பறவையானால்.  எவ்வளவு   ஆனந்தமாய் இருக்கும்  என்று   எண்ணினேன்.  என்   கற்பனை விரிந்தது.  


 நான்   ஒரு   பறவையானால்   வானவெளியில் சிறகுகளை   அகல   விரித்து   ஆனந்தமாய்  பறந்து செல்வேன்.  விரும்பிய   வேளைகளில்   விரும்பிய இடங்களில்   அமர்வேன்.  எவ்வித   கட்டுப்பாடும் எனக்கு   இருக்காது.    இந்த   உலகில்   மனிதர்கள் படும்   துன்பங்கள்   எதுவும்   என்னை   தொடாது.   சுதந்திரமாக  எங்கும்   பறந்து   செல்வேன்.  


 உயர்ந்த மலைகள்,   பச்சை   பசேலென   காட்சி   தரும்    வயல்வெளிகள்  , பழத்தோட்டங்கள்,   வானளாவிய மரங்கள்    அனைத்திலும்   நான்   சென்று   அமர்ந்து   ஆனந்தமடைவேன்.       உணவை   பற்றிய    கவலை   எனக்கில்லை.    எப்போது   நான் விரும்பிய  பழத்தை   உண்டு  மகிழ்வேன் .   குடிசைகளோ   எனக்குத்   தேவையில்லை     என்சகோதரர்களுடன்   உள்ளாசமாக மர   உச்சியில்   படுத்துறங்குவது.   அதிகாலை    வேளைகளில்    எழும்புவேன்.   ஆனாலும்   நான்   ஒரு   பறவையாகும்   ஆசைதான்    நிறைவேறவில்லையே !!! ☹️😔

தரம் 2 சுற்றாடல் பயற்சி படம் 1. Part:-1

நாமும்  பாடசாலையும்


👉. பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர் யார்?


  • அதிபர் 


👉. பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருக்க உதவுபவர்?


  •  சுத்திகரிப்பு தொழிலாளி


👉பாடசாலை நேரத்திற்கு மணி அடிப்பவர்?


  •  அலுவலக உதவியாளர்


👉எனக்கு நல்ல அறிவுரைகளை கூறுபவர்கள்?



  • ஆசிரியர்


👉பாடசாலைக் கருமங்களில் உதவும் நபர்களில் ஒருவர்?



  • பிரதி அதிபர்

 


 Note(குறிப்பு )


  • வகுப்பைறையை அழகுபடுத்த செய்ய வேண்டியவை


 பூச்சாடிகள் வைத்தல் 

 சுவர்ச்சித்திரம் வரைதல்

 ஆசிரியர் மேசைக்கு சீலை போட்டு பூங்கொத்து வைத்தல்

 காட்சிப் படத்தை ஒட்டுதல்

 நாட்காட்டியை தொங்கவிடல்

தரம் 3மாணவர்களுக்கான ஆங்கில மொழி கட்டுரை (my pet dog )

🐕My pet dog🐕

  1. My pet is dog.
  2. It's name is kutty.
  3. It's play with me.
  4. It's like to eat meat.
  5. It's colour is black and white.
  6. It's chashing the cats.
  7. This will protect the house
  8. I love my dog very much.

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️ ‌ தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும...