Monday, July 26, 2021

கட்டுரை := சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம்

சிறுவர்உரிமைகளைப்பாதுகாப்போம்🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑




 சிறுவர்கள் தான் சிறந்த விஞ்ஞானிகள் என்று முன்னை நாள் இந்திய ஐனாதிபதி அப்துல்கலாம் கூறினார் அந்த சிறுவர்களுக்கு வழிகாட்டி நல்வழிப்படுத்தல் நம் தலையாய கடமையாகும் அவர்களின் தேவைகளை உணர்ந்து வாழ்வளிக்க வேண்டும்

"சின்னஞ் சிறு குருவி போல- நீ
திரிந்து பறந்து வா பாப்பா
..................................................................
என்ற பாரதியாரின் பாடல் வரிகள் சிறுவர்களின் சுதந்திரத்தை எடுத்தியம்புகின்றன.சுதந்திரம் சிறுவர்களிடத்தே காணப்பட வேண்டும் உறுதியுள்ள உள்ளம் சிறுவர்களிடையே வளர்ச்சியடைய வேண்டும். அப்பொழுது தான் எதிர்கால தலைவர்களான சிறுவர்களின் உள்ளத்திலே குறிப்பிட்ட உரிமைகளெல்லாம் பேணப்படும்.

உலகமகா யுத்தத்தின் முன் சிறுவர்கள் தொழிற்சாலை களில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் . பெரியவர்களை போலவே நடத்தப்பட்டார்கள் . குறைந்த ஊதியத்தை கொடுத்து நிறைந்த வருவாயை பெற்றார்கள். சிறுவர்களுக்கு ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலங்களுக்கு மேல் வேலை கொடுக்கக் கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது.


சிறுவர்கள் உரிமைகள் பற்றி' ஐக்கிய நாடுகளின் சமவாயம் ' 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ள பட்டாலும் இவ்வாண்டுக்கு முன்னரேயே சிறுவர் பற்றிய அமைப்புக்கள் தோன்றி இருப்பதைக் காணலாம். இந்த வகையில் 1946 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சிறுவர்நிதியம் (யுனிசெப்) ஆகும். இது சிறுவர் சாசனத்திற்கு உட்பட்டதாக சிறுவர்கள் பாதுகாப்பு உயிர் வாழ்தல் சிறுவர் அபிவிருத்தி போன்றவற்றுக்காக இயங்கி வருவதையும் நாம் கண்டு கொள்ளலாம்.

இன்றைய உலக சமூகத்தில் சிறுவர்களும் சிறுவர் உரிமைகளும் முக்கிய இடம் பெறுவதைக் காணலாம்.'இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்'என்ற முதுமொழிக்கு இணங்க சிறுவர்கள் பாதுகாக்க பட்டு அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டிய கட்டாய நிலைக்கு இன்று உலகளாவிய ரீதியில் நாடுகள் தள்ளப்பட்டிருப்பதைக்காணலாம்.

இவ் ஆண்டில் யுத்த நடவடிக்கைகளாலும் மற்றும் வேலைக்கு அமர்த்தல் , பாலியல் வல்லுறவு, போதைவஸ்து அநாதைகள் ஆக்கப்படும் போன்ற காரணங்களினால் சிறுவர் பாதிக்கப்பட்டு அவர்களது உரிமைகளும் மீறப்பட்டு வருவதையும் கண்டு கொள்ளலாம். வருங்கால சமுதாயம் சிறப்பாக அமைவதற்குச் சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது.உலகம் வேகமாக முன்னேற்றம் அடைந்தாலும் சிறுவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை என்றே கூறவேண்டும்.

இன்று உலகளாவிய ரீதியில் முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அண்மையில் ஐக்கிய நாடுகள் கூறியுள்ளனர்.

No comments:

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️ ‌ தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும...