🌏சுப்ரமணிய பாரதியார் 🌏
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா'' அவன் பாட்டு கேட்டு கிறுகிறுத்துப் போனேனடா''. என்று பாடினார் ஒரு கவிஞர். பாரதியார் இந்தியாவில் தமிழ்நாட்டில் எட்டயபுரத்தில் 1881. டிசம்பர் 21ஆம் திகதி பிறந்தார். சின்னச்சாமி ஐயரும் இலக்குமி அம்மாளும் பாரதியாரின் தந்தையும் தாயும் ஆவார்கள். பாரதியாரின் இயற்பெயர் சுப்பிரமணியம் என்பதாகும். அவரை சுப்பையா என்று அழைத்தனர். சுப்பிரமணியன் வயது இருக்கும் போதே தாயார் இறந்துவிட்டார். பாட்டிி பகீரதி அம்மாளுடன் வாழ்ந்தார். பாடசாலையில் படிக்கும் போது கவிபுனையும் ஆற்றலில் சிறந்து விளங்கினார். 1897 ஆம் ஆண்டு செல்லமாவை மனம் செய்து வைத்தார்கள். 1898 தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வறுமை வாட்டியது. தனது நிலையை விளங்கி தனக்கு உதவிபுரியுமாறு எட்டயபுர அரசருக்கு. எழுதினார் அரண்மனையில் அவருக்கு வேலை கிடைத்தது. கவிஞர்கள் ஒரு வேளை நிலைத்து நிற்கவில்லை. வேலையை விட்டு காசிக்கு சென்றார். எட்டயபுரம் மன்னரால் அழைத்து வரப்பட்டு அவரது அரண்மனையில் இடம் கொடுத்தார். பல காலம் பாட்டெழுதாமல் இருந்தார். மதுரையில் இருந்து விவேகபானு என்ற இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் 1904 பாரதியின் ஆக்கம் வெளியானது. மதுரை சேனாதிபதி மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகவும் கடமையாற்றினார். வல்லூறு கட்டிடங்களில் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றினார். பாரதி தமிழ், ஆங்கிலம்,சமஸ்கிருதம் ஆகியவற்றில் பெற்றிருந்தார்.
" தேடிச்சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து -நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி -பெருங்
கூற்றுக் கிரையென மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே- நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
No comments:
Post a Comment