அப்துல் கலாம் இந்தியா நாட்டு ராமேஸ்வரத்தில் பிறந்தார். அவர் ஆவுல் பக்கீர் ஜெயினாலாப்தீன், ஆஸியா உம்மா தம்பத்தியரின் மகனாவார். அப்துல் கலாம் 1931 அக்டோபர் 15ஆம் திகதி பிறந்தார். அவர்களது குடும்பம் ஏழ்மையானது. வருமை அவர்களது குடும்பத்தை வாட்டியது. தொடக்கக் கல்வியை சொந்த ஊரில் கற்றார். பாடசாலை முடிந்ததும் பத்திரிகை விநியோகம் செய்தார். உயர்கல்வியை திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் கற்றார். அவர் இலங்கவியல் துறையில் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் உள்ள எம். ஐ. ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் கற்றார். அத்துறையில்முதுகலைமாணி பட்டத்தையும் பெற்றார். அப்துல்கலாம் இந்திய ராணுவத்திற்காக சிறிய உலங்குவானூர்தியை வடிவமைத்தார். 1980ஆம் ஆண்டு SLV-111 ரோக்கேற்றைப் பயன்படுத்தி ரோகினி என்ற துணைக்கோளை வெற்றிகரமாக எவச் செய்தார். இதற்காக இந்திய ஏவுகணை திட்டத்தில் பணிபுரிந்துள்ளார். 2007ஆம் ஆண்டு வரை இந்தியா குடியரசின் தலைவராக பதவிவகித்தார். இரண்டாவது தடவை போட்டி போடுவதில் இருந்து தன்னை விலகிக்கொண்டார். இது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது. இந்திய அரசு ''பாரத ரத்னா '' விருதினை வழங்கிக் கௌரவித்தது. பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். குழந்தைகளை மதிக்கும் பெருந்தலைவர் கலாம் அவர்களே. சிறந்த விஞ்ஞானிகள் குழந்தைகளே என்று கலாநிதி கலாம் கூறினார். அவரது மகத்தான சேவையை புரிந்து கொள்ளும் பக்குவம் பல தலைவர்களுக்கு இன்னும் வரவில்லை. டாக்டர் அப்துல் கலாம் சிறந்த எழுத்தாளரும் ஆவார். அவரது ''அக்னி சிறகுகள் '' இவரது சிறந்த நூலாகும். இளைஞர்களே கனவு காணுங்கள் உங்கள் கனவு தாய்நாட்டில் முயற்சிக்கானதாக இருக்க வேண்டும். தான் பிறந்த நாட்டில் உயர்ச்சிக்காகப் பாடுபட்ட உத்தம மனிதர் அப்துல் கலாம் ஆவார். அப்துல் கலாம் அவர்கள் 21/07/2015 இயற்கை எய்தினார். அவரது பூத உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் 30/7/2015ல் சகல மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது..
1 comment:
S
Post a Comment