Thursday, July 29, 2021

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️









தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும்பி பார்த்தேன் வீட்டின் ஒரு புறத்தின் புத்தக அலுமாரியின் மேற் புறத்தில் கிடந்த " பாக்கர்" பேனா ஒன்று என்னை பார்த்து பேசியது. அது தன் கதையை மிக கவலையுடன் கூற தொடங்கியது. "பாக்கர்" பேனா கூறிய கதையை நீங்களும் கேட்க விரும்புகிறீர்களா? இதோ! கேளுங்கள். 
   
    தம்பி நான் ஒரு "பாக்கர்" பேனா. இப்பொழுது கூர் உடைந்து முடங்கி கிடக்கிறேன். உனது அண்ணா அருண் தான் என்னை போட்டுள்ளான். அவனுக்கு உங்களுடைய மாமா என்னை பிறந்தநாள் பரிசாக மூன்று வருடங்களுக்கு முன்னர் கொடுத்திருந்தார். அப்பொழுது நான் எவ்வளவு அழகாக இருந்தேன் தெரியுமா? தங்க நிறத்தில் பளபளவென்று ஒளி வீசி கொண்டிருந்தேன். என்னை தன் சாட்டை பைக்குள் வைத்திருப்பதே பெரும் பேறென கருதினான். என் எழுத்துக்கள் முத்து போல காட்சி அளிக்கும். அந்தளவுக்கு 3ன் கூர் அழகாக எழுதுதற்கு பயன்பட்டது. என் உதவியினால் அருமையான கட்டுரைகள், கவிதைகள், போன்றவற்றை எழுதினான். அவனது வகுப்பு மாணவர்கள் எல்லாம் என்னை ஆசையோடு பார்ப்பார்கள்.
       
யாழ் இந்து கல்லூரியில் க. போ. த சாதாரண தர பரீட்சை நடைபெற்றது. அந்த பரீட்சையில் என்னை உபயோகித்து பல்வேறு பாடங்களுக்கும் விடை எழுதினான். ஒவ்வொரு பாடங்களுக்கும் அவனுக்கு "ஏ" சித்தி வந்தது. அதனால் அவன் என் மீது அளவற்ற அன்பு கொண்டான். அதிஷ்ட பேனா என்று என்னை தனது கன் போல காத்து வந்தான். யார் கேட்டாலும் என்னை கொடுக்க மாட்டான். பாடசாலை செல்லும் போதெல்லாம் என்னை தன் புத்தகக் பையினுள் பத்திரமாக வைத்து கொண்டு செல்வான். இப்படியே ஒர் ஆண்டு கழிந்தது. ஒரு நாள் அருண் பேருந்து மிதிபலகையில் ஏறும் போது பக்கத்தில் நின்றோரின் நெருக்கடியில் அவனது சட்டை பையினுள் இருந்த நான் தவறி கீழே விழுந்து விட்டேன். பக்கத்தில் நின்ற ஒரு பயணியின் சாப்பாத்து காலின் கீழ் நான் அகப்பட்டு விட்டேன். என் முடியும் பேனா கூரும் நசிந்து விட்டது. அருண் மிக சிரமத்தோடு குனிந்து என்னை எடுத்து பார்த்தான். என் கூர் ஒடிந்திருப்பதை பார்த்து மிக்க வேதனை பட்டான். வீடு செல்லும் வழியெல்லாம் விம்மி விம்மி அழுதான்.
       எனக்கு புதிய கூர் ஒன்றை பொருத்த பல கடைகளும் ஏறி இறங்கினான். ஆனால் பொருத்தமான கூர் கிடைக்கவில்லை. என்னை எறியவும் மனமில்லை. புத்த்க அழுமாரியின் மேலே என்னை வைத்து விட்டான். கடந்த ஒர் ஆண்டு காலமாக யான் இங்கே கிடக்கிறேன். யான் முன்னர் இருந்த நிலையையும் இப்போது இருக்கு நிலையையும் எண்ணி பார்க்கிறேன். வேதனை என்னை வாட்டுகிறது. எனக்கு ஏதும் விமோசனம் கிடைக்குமா? அருண் முன்னர் போல என்னை தன் சட்டை பைக்குள் கொண்டு செல்லும் நாள் வருமா? என்று ஏங்கி தவிக்கிறேன். என் கவலையை அருணிடம் சொல்லு தம்பி என்று கூறியது அந்த பாக்கர் பேனா...............................

கட்டுரை := நான் ஒரு உடைந்த பேனை

🖊️நான் ஒரு உடைந்த பேனை 🖊️ ‌ தம்பி என்னைதெரியவில்லையா? என்று ஒரு குரல் கேட்டது. எங்கள் வீட்டு மூலையில் இருந்து தான் இக்குரல் கேட்டது. திரும...